ராஞ்சி :
கால்நடை தீவன வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உடல் நலமில்லாமல் ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தனது மகன் தேஜ் பிரதாப் யாதவின் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டி 5 நாட்கள் பரோல் கேட்டு ராஞ்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. லாலுவுக்கு பரோல் கொடுக்க காவல்துறை சம்மதித்ததை தொடர்ந்து நீதி மன்றம் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது.