கவுகாத்தி:

அஸ்ஸாம் மாநில பாஜக எம்எல்ஏ திலிப் குமார் பால் தனது துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது 38வது திருமண நாள் அன்று இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். தனக்கு நிறைய பணி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை சபாநாயகர், முதல்வருக்கு அவர் அனுப்பியுள்ளார். இதன் நகலை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.