சென்னை:
மதுரை, கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் வெயில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் வெயிலில் செல்வதை தவிர்ப்பது நல்லது.
.தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் வெப்பக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெயில் மண்டையை பிளந்து வருகிறது. தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்துள்ளது. குறிப்பாக, கரூர், மதுரை, திருச்சி ஆகிய 3 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது.
நேற்று மதுரை, திருச்சி, கரூர் பகுதிகளில் வெயிலின் அளவு தலா டிகிரி அளவில் பதிவாகி உள்ளது. மதுரையில் அதிகபட்சமாக 101 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
இதற்கிடையில், வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில பகுதிகளி மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.