காஷ்மீர்
சென்னையை சேர்ந்த இளைஞர் காஷ்மீரில் நடந்த கல்வீச்சில் அடிபட்டு மரணம் அடைந்தார்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் கல்வீச்சி தாக்குதல் நடத்துவது மீண்டும் அதிகரித்து வருகிறது. கல்வீச்சு தீவிரவாதிகளை ஏற்கனவே கைது செய்த காஷ்மீர் அரசு அவர்களில் பலரை கருணை அடிப்படையில் விடுதலை செய்தது தெரிந்ததே. அதன் பின் கல்வீச்சு சம்பவம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கல் வீசுபவர்களைக் கட்டுப்படுத்த அரசு பல வகையிலும் முயன்று வருகிறது.
காஷ்மீர் மாநிலம் பர்காம் மாவட்டத்தில் உள்ள நாற்பால் என்னும் இடத்தில் தீவிரவாதிகள் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த திருமணி மற்றும் அவருடன் சுற்றுலா சென்ற 5 பயணிகள் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தலையில் படுகாயம் அடைந்த திருமணி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருடன் அடிபட்ட 5 சுற்றுலாப்பயணிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.