ஐதராபாத்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை முன்வைத்து ஆங்காங்கே சூதாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் பணம் செலுத்தி சூதாடி வருகின்றனர்.

இந்நிலையில் ஐதராபாத்தில் ஐபிஎல் சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்டம் நடத்திய 12 பேர் சிக்கினர். அவர்களிடம் ரூ. 15.50 லட்சம் ரொக்கம், 22 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது.