பெங்களூரு:
கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில், தன் மீதும் தன் அரசு மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி அவதூறு பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, அமித்ஷா, எடியூரப்பா ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் சித்தராமையா சார்பில் அவரது வக்கீல் அனுப்பியுள்ளார்.