தர்பூசணி – 2 கப்

பயத்தம்பருப்பு – 1 கப்

வறுத்து அரைப்பதற்கு;

மிளகாய் வற்றல் – 3

சீரகம் – 1 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி

துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி

பெருங்காயம் – 1 சிட்டிகை

தாளிப்பதற்கு தேவையானவை;

கடுகு – 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

 

தர்பூசணியில் சிவப்பு பகுதியை மட்டும் எடுத்துவிட்டு பச்சை நிற தோல் பகுதியையும் எடுத்துவிட்டு, நடுவில் இருக்கும் வெள்ளை சதைப்பகுதியை மட்டும் அரிந்து வைத்துக் கொண்டு பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை தனித் தனியே வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பருப்புடன் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளித்து பருப்பு கலவையில் சேர்த்து கிளறி  இறக்கவும். இந்த கூட்டு சாதம், இட்லி, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம்.