டில்லி:
காஷ்மீர் கத்துவா மாவட்ட சிறுமி பலாத்கார கொலை வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றம் ஆலோசித்து வந்தது. வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற காஷ்மீர் அரசு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து இந்த வழக்கை பஞ்சாப் மாநிலம் பதன்கோட் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தகவலை அறிந்த பதன்கோட் நீதிமன்றம், கத்துவா வழக்கு விசாரணை தினமும் நடத்தப்படும். விசாரணை வீடியோவில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த விசாரணை ஜூலை 9ம் தேதி நடக்கும் என தெரிவித்துள்ளது.