பெங்களூரு:
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோலார் பகுதியில் இன்று சைக்கிளில் சென்று ஓட்டு வேட்டையாடினார். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 12ந்தேதி நடைபெற்ற உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு தேசிய கட்சிகளின் அகில இந்திய தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பெங்களூரு அருகே உள்ள கோலார் பகுதியில் சைக்கிள் மூலம் சாலைகளில் சென்று பொதுமக்களிடையே ஓட்டு வேட்டையாடினார். மேலும் பல கிராமப்பகுதிகளில் மாட்டு வண்டியில் சென்றும் பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.
ராகுல்காந்தியின் எளிமையான முறையிலான வாக்கு சேகரிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.