சென்னை:
இன்று அடிக்கல் நாட்டப்படும் மறைந்த ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் பீனிக்ஸ் பறவை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்படுகிறது.
கடந்த 2016ம் ஆண்டு மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் அடிக்கல் நாட்டும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினாவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சமாதி வளாகத்திலேயே ரூ.50.80 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.
இந்த நினைவு மண்டபம், அவரது அரசியல் மற்றும் பொதுவாழ்க்கைய ஒப்பிட்டு, அவர் ஒவ்வொரு முறை தோற்றபோதும், மீண்டும் உற்சாகத்துடன் களம் கண்டு வெற்றிபெற்றதை நினைவுபடுத்தும் நோக்கில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நினைவு மண்டப படங்களை அதிமுக வெளியிட்டு உள்ளது.