பெங்களூரு

ரும் 12ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   வாக்கு எண்ணிக்கை 15ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கபட்டுள்ளது.   தற்போது மொத்தம் உள்ள 2655 பேரில் 2560 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஆராயப்பட்டு அவர்களின் குற்றங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தம் உள்ள 2500 வேட்பாளர்களில் 391 பேர் மீதி குற்றவியல் வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இவர்களில் 254 பேர் மீது தீவிர குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.    அனைத்துக் கட்சிகளும் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளன.  இதில் பாஜக வேட்பாளரகள் அதிகம் பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

பாஜகவின் 224 வேட்பாளர்களில் 83 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் ஆவார்கள்.  இதே போல் காங்கிரசில் 220 பேரில் 59 பேரும், ம ஜ த வில் 199 பேரில் 41 பேருக் குற்றப் பின்னனி உள்ளவர்கள் ஆவார்கள்.  மொத்தம் உள்ளவர்களில் 23 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.