சண்டிகர்:
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டம் டோப்கானா பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் கோயல். பா.ஜ.க. பிரமுகரான இவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் வீட்டு வாசலில் சஞ்சய் கோயல் இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் விஜய் சர்மா இவரை சுட்டு கொன்றுவிட்டு தப்பியோடி விட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. சஞ்சய் கோயல் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.