டில்லி:
கடந்த ஜனவரி மாதம் டில்லி சட்டமன்றத்தில் திப்பு சுல்தான் உள்பட 70 உருவப்படங்களை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். இதற்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் திப்பு சுல்தான் உருவப்படத்தை சட்டமன்றத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜ.க எம்.எல்.ஏ மஞ்சிந்தர் சிங் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் சபாநாயகரிடம் கூறுகையில், ‘‘திப்பு சுல்தான் 4 லட்சம் இந்துக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார். திப்பு சுல்தான் படத்திற்கு பதிலாக ஜஸ்ஸா சிங் அகுல்வாலியா, பிரித்வி சவுகான் ஆகியோரது படங்களை வைக்க வேண்டும்’’ என்றார்.