மும்பை:

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி–&நீதா அம்பானி தம்பதியருக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் ஆகாஷ், இஷா ஆகியோர் இரட்டையர். 3-வது மகன் ஆனந்த். இதில் ஆகாஷூக்கும்&ஸ்லோகா மேத்தா இடையே கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது. திருமணம் வரும் டிசம்பரில் நடக்கிறது.

இந்நிலையில் அம்பானி மகள் இஷாவுக்கும், பிரமல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனரான ஆனந்த் பிரமோலுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வருகின்றனர். இரு குடும்பத்தினர் மத்தியிலும் நல்ல உறவு உள்ளது.

இவர்களின் திருமணத்தையும் டிசம்பரில் நடத்த முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஷாவும், ஆனந்த் பரமோலும் இணைந்து இருக்கும் புகைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சமூக வலை தளங்களில் இது வைரலாகி வருகிறது. இதன் மூலம் இவர்களின் காதல் வெளிவுலகிற்கு தெரியவந்துள்ளது.