ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் படிகாம் பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும், இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள படிகாம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளை தேடி வந்தனர். சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற தேடுதல் வேட்டையில், பயங்கரவாதிகள் தங்கியுள்ள இடம் தெரிய வந்தது.
இதையடுத்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர்மீது சரமாரியாக சுடத்தொடங்கினார். ஆனால், பாதுகாப்பு படையினர் எதிர்தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை சுட்டுத்தள்ளினர். இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஷேஷ் பால் வைட் உறுதி செய்துள்ளார்.