மும்பை:

பாஜக தலைவர்கள் தலித் வீடுகளில் சாப்பிடும் நடைமுறை பின்பற்ற தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மும்பையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தலித் வீடுகளுக்குள் நுழைந்து அரசியல் தலைவர்கள் அவர்களுடன் உணவு சாப்பிடுவதால் மட்டுமே தீண்டாமையை ஒழித்து விட முடியாது. நீங்கள் யார் வீட்டில் வேண்டுமானாலும் உணவருந்தலாம்.

ஆனால் சபரி வீட்டில் ராமர் சாப்பிட்டது போல் நாம் அவர்களுடன் ஒன்றிணைந்து விட முடியாது. பெயரளவுக்கு அவர்களது வீடுகளுக்குச் சென்று உணவு உண்பதை விடுத்து, அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து அவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வேண்டும்’’ என்றார்.