ஐதராபாத்:

ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் 55 வயது ரிக்‌ஷா தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுமியை ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. அதையும் மீறி குற்றம் புரிபவர்களுக்கு அதுவே கடைசி நாளாக அமையும். பாலியல் பலாத்கார வழக்குகளை காவல் நிலையத்தில் பதிவு செய்து விசாரணை நடத்தினால் மட்டும் போதாது. நிர்பயா சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்’’ என்றார்.