உ.பி.:
பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல காரணமாக இருந்தவரும், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படு பவருமான முகமது அலி ஜின்னா படங்களை கிழித்து எரிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அனைத்திந்திய முஸ்லிம் மகாசங்கி தேசிய தலைவர் பர்கத் அலிகான் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க அலுவலகத்தில் முகமது அலி ஜின்னாவின் படம் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மாணவர்களின் ஒருசாரார் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிதுள்ளனர்.
இந்நிலையில் ராம்பூரில் பேசிய முஸ்லிம் மகாசங்கத் தலைவர் பர்கத் அலிகான், நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட இந்தியத் தலைவர்களின் படங்கள் பாகிஸ்தானின் எந்த நிறுவனத்திலும் இல்லை என்றும், ஜின்னாவின் போஸ்டர்களும், அவரைப் போன்ற மக்களையும் கிழித்து எறிந்து அனைவருக்கும் தெரிவித்துள்ளேன் என்றும், சுவரொட்டியை எரிப்பவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு 1 லட்ச ரூபாயை பரிசு அறிவிப்பதாகவும் கூறினார்.
இந்திய முஸ்லிம்கள் முகமது அலி ஜின்னாவையும் பாகிஸ்தானையும் வெறுப்பதாகவும் பர்கத் அலிகான் கூறி உள்ளார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.