எல்லையில் அமைக்கப்பட்டு வரும் வேலியை பார்வையிடும் முதல்வர் சோனுவால்

டில்லி:

டிசம்பர் இறுதிக்குள், பங்களாதேஷுடன் சர்வதேச எல்லைகளைச் சுற்றி வேலி அமைத்தல் வேலை முடிந்து விடும் என்றும், இதன் காரணமாக அஸ்ஸாமினுள்  சட்டவிரோதமோக குடியேறுவது தடுக்கப்படும் என்றும்  அஸ்ஸாம் முதல்வர் கூறினார்.

நாட்டின் எல்லை பகுதிகளில் இரும்பு முள் கம்பியிலான வலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்தியா  பங்களாதேஷ்  இடையே அஸ்ஸாம் மாநிலம் பகுதியில் உள்ள எல்லை மற்றும் , ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதிகளிலும் பென்சிங் அமைக்கப்படும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள  பங்களாதேஷ் எல்லையில் அமைக்கப்பட்டு வரும் பென்சிங் பணி  டிசம்பர் மாதத்தில்  முடிவடையும் என்று அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனுவால் கூறினார்.

டில்லியில் நடைபெற்ற ஆசியான் நாடுகளுடன் உறவுகள் குறித்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சோனுவால், ஆசிய நாடுகளுடனான உறவை  வலுப்படுத்த மத்திய கிழக்கின் கொள்கையை மையமாகக் கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும், மாநிலத்தில் சட்டவிரோத குடியேறியவர்களை அடையாளம் காணும் நோக்கில், குடிமக்கள் தேசிய பதிவேட்டை புதுப்பிப்பதற்கான பணி இந்த மாத இறுதியில் நிறைவு அடையும் என்றும் கூறினார்.

அஸ்ஸாமில்  சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்த வழக்கில் உச்சநீதி மன்ற உத்தரவை தொடர்ந்து, அதுகுறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இந்த மாதத்திற்குள் முடிவடையும் என்றும், “இந்தியாவின் நல்ல குடிமகனாக இருப்பதற்கு போதுமான சான்றுகள் இருப்பதாக மக்கள் நம்பினால், அவர்களது ஆட்சேபனைகள் மற்றும் கூற்றுக்களை சமர்ப்பிக்கலாம் மற்றும் அவர்களின் பெயர் பதிவேட்டில் புதுப்பிக்கப்படும் என்றும் சோனுவார் கூறினார்.

1971 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதிக்குள் மாநிலத்திற்குள்  சட்டவிரோதமாக  நுழைந்த அனைத்து உண்மையான குடிமக்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக மாநிலத்தில் குடியேறாதவாறு மாநில எல்லையில் முள்வேலி (பென்சிங்) அமைக்கப்பட்டு வருவதாகவும், அந்த பணி டிசம்பருக்குள் முடிவடைந்து விடும் என்றும் அவர் கூறினார்.

சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறியவர்கள் தங்களது பெயர்களை சேர்க்காவிட்டால், அது கண்டு பிடிக்கப்பட்டால், அவர்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள், மேலும் நாடு கடத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.