பெங்களூரு:

ர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு ஆதரவாக திரையுலகை சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  காங்கிரசுக்கு ஆதரவாக பிரபல கன்னட நடிகர் சுதீப் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது கர்நாடக முதல்வர்  சித்தராமையாவை ஆதரித்து பிரபல கன்னட நடிகர் சுதீப், சித்தராமையா போட்டியிடும் சாமுண்டேஸ்வரி மற்றும் பாதாமி ஆகிய தொகுதிகளில் அவரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வரும் 9ந்தேதி வரை சித்தராமையாவுக்கு அவர் ஆதரவு திரட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் சித்தராமையா  மகன் டாக்டர். யதீந்திரா போட்டியிடும் வருணா தொகுதியிலும் சுதீப் பிரசாரம் செய்து பேரணியில் கலந்து கொள்கிறார்.

அந்த தொகுதியில்  வாழ்ந்து வரும் வால்மிகி சமுதாய மக்களை கருத்தில்கொண்டு, அவர்களின் வாக்குகளை பெறும் வகையில்,சுதீப்பை தேர்தல் பிரசாரத்தில்  சித்தராமையா ஈடுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.