சென்னை:

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த நிதி ஆண்டில் 9 மாதங்களில் மட்டும் ரூ.29,057 கோடி தமிழகத்தில் வரி வசூலாகி உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

நேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் 27வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு தமிழக கோரிக்கைகள் குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், 2017 – 18-ம் ஆண்டில் 9 மாதங்களில் தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.29,057 கோடி என்றும்,  ஏப்ரல் மாதம் மட்டும் தமிழகத்தில் ரூ.3,249 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்  வணிகர், தொழில் நிறுவனங்கள், சிறு வியாபாரிகளின் மனுக்களில் 84 கோரிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு முன்வைத்த 38 கோரிக்கைகள் ஜிஎஸ்டி கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் கூறினார்.