டில்லி:
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் நேற்று புழுதி புயல் வீசியது. இதில் உத்தரபிரதேசத்தில் மட்டும் 65-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க பிரதமர் மோடி இன்று உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.