வாஷிங்டன்:

தென்கொரியா, – வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசி சுமூக முடிவுகளை எடுத்துள்ளனர். தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான தேதி மற்றும் இடம் ஆகியவை முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் கிம் ஜாங் தன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் முடிவாகிவிட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் மாநில சுற்றுப்பயணத்துக்கு புறப்பட்ட அவர் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் இதை தெரிவித்தார். மேலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்தார்.