ராய்பூர்:
ஜார்க்கண்ட் சாத்ரா மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்ற 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் திரும்பி வந்தவுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். கிராம பஞ்சாயத்தில் இவ்விஷயம் விசாரிக்கப்பட்டு 4 பேருக்கும் தோப்பு காரணம் போடவும், ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை அடித்து உதைத்துள்ளனர். சிறுமியை தீ வைத்து எரித்துள்ளனர். இதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தப்பியோடி கும்பபை போலீசார் தேடி வருகின்றனர்.