யாங்கூன்:
மியான்மரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
மியான்மரில் பல பகுதிகளில் பச்சை மாணிக்கம் கல் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. மியான்மரின் வடபகுதியில் கச்சின் மாநிலம் வாக் கர் கிராமத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
அப்போது ஒரு பாறை உருண்டு விழுந்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.