ஸ்டாக்ஹோம்:

பாலியல் புகார் தொடர்பான சர்ச்சை காரணமாக, இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படாது, நோபர் பரிசு  என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவினர் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக  ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

நோபல் பரிசை தேர்வு செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர் ஒருவரின் கணவர் மீது பாலியல் புகார் கூறப்பட்டதை தொடர்ந்து,  நோபல் பரிசுக்கான நபர்களை தேர்வு செய்யும் கமிட்டியில் இருந்து 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட மாட்டாது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோபர் பரிசு தேர்வு குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதில்,  மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதால், இந்த ஆண்டு இலக்கியத்திற்கு விருது வழங்குவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்திற்கான பரிசு பெறும் நபரை தேர்வு செய்யும் பணி இறுதிக்கட்ட நிலையில், இருந்தது. ஆனால், அந்த நபரை தேர்வு செய்வதற்கு முன்னர், அகடமி மீதான நம்பிக்கையை மீண்டும் பெறும் வரையிலும், தேர்வு செய்யும் பணியில் அதிகமானோர் ஈடுபட சிறிது காலம் தேவைப்படுகிறது.

ஆனவே இந்த ஆண்டுக்கான விருதை அடுத்த ஆண்டு ( 2019)  இரண்டு விருது வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.