மாஸ்கோ:

சிரியா உள்நாட்டு போரில் அதிபர் ஆசாத் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய படைகளும் ஈடுபடடுள்ளது. இந்த வகையில் ரஷ்ய போர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் உயிரிழந்தனர்.

சிரியா ஹெமிம் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த விமானம் சிறிது நேரத்தில் மத்திய தரைக்கடலில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிரிழந்தனர்.

விமான என்ஜினில் பறவை மோதியது தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இதோடு சேர்த்து சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினரின் பலி எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது