டோக்கியோ:

ஜப்பான் ஓசாகா நகரில் ஒரு தீம் பார்க் உள்ளது. இங்குள்ள ரோலர்கோஸ்டர் விளையாட்டு எந்திரம் உள்ளது. இதில் இன்று 64 பேர் மகிழ்ச்சியுடன் அந்தரத்தில் பயணம் மேற்கொண்டனர். அப்போது மக்கள் தலைகீழாக இருந்த நிலையில் எந்திரம் திடீரென பழுதானது.

சுமார் 100 அடி உயரத்தில் 60க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியதால் அச்சத்தில் அலறினர். அவர்களை மீட்புப் படையினர் ஒவ்வொருவராக மீட்டனர். 2 மணி நேரம் போராடி மீட்கப்பட்டனர். ஜப்பானில் இதுபோல் அடிக்கடி நிகழ்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 3 முறை ரோலர்கோஸ்டர் எந்திரம் பழுதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]