திரிபோலி
லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தின் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியதில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
லிபியாவின் அதிபர் முகமது கடாபி கொல்லப்பட்ட பின் கடந்த 2012ஆம் ஆண்டில் தேர்தல் முறை உருவானது. லிபியாவின் சுயாட்சி தன்மையுடன் செயல்படக் கூடிய சில அமைப்புகளில் தேர்தல் ஆணையம் நம்பிக்கைக்கு உரியதாக உள்ளது. இந்த தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் லிபியாவின் தலை நகர் திரிபோலியில் அமைந்துள்ளது.
இன்று இந்த தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இருவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.