லக்னோ
தலித் வீட்டில் சமைத்த உணவை சாப்பிட உத்திரப் பிரதேச பாஜக அமைச்சர் ஒருவர் மறுத்துள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தை பாஜக ஆட்சி செய்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உள்ள அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களில் ஒருவர் சுரேஷ் ராணா. இவர் சமீபத்தில் அலிகாருக்கு சென்றுள்ளார்/ அலிகாரில் நடந்த கட்சி நிகழ்வில் கலந்துக் கொண்ட பின் அவர் ரஜனீஷ் என்பவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். ரஜனீஷ் தலித் வகுப்பை சேர்ந்தவர்.
ரஜினீஷ் அமைச்சருக்காக சிறப்பு விருந்து ஏற்பாடு செய்து அளித்துள்ளார். ஆனால் அமைச்சர் சுரேஷ் ராணா அவர் வீட்டில் சமைத்து உணவை சாப்பிட மறுத்துள்ளார். அதன் பிறகு வெளியில் இருந்து வாங்கி வந்த உணவை அமைச்சர் சாப்பிட்டுள்ளார். இந்நிகழ்வு மாநிலத்தில் கடும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சி உத்திரப் பிரதேசத்தை ஆளும் பாஜக தலித்துக்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை எனவும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்த்து வருவதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.