மும்பை

த்திரிகையாளர் ஜோதிர் மே டே கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சோட்டா ராஜன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ஆம் தேதி மும்பை ஆங்கில புலனாய்வு பத்திரிகையாளர் ஜோதிர் மே டே சுட்டுக் கொல்லப்பட்டார்.    இந்த வழக்கில் சம்பப்பந்தப்பட்டதாக  பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 11 பேர்  கைது செய்யப்பட்டனர்.   இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கூட்டாளியான சோட்டா ராஜனுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.   அவர் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கை சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வந்தது.  இன்று காலை சோட்டா ராஜன் உள்ளிட்ட 7 பேரை குற்றவாளிகள் என இன்று காலை நீதிமன்றம் அறிவித்தது.

இன்று மாலை நீதிமன்றம் சோட்டா ராஜன்  உள்ளிட்ட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை அளித்துள்ளது.   இந்த தீர்ப்பு இன்று மாலை சுமார் 4.30 மணிக்கு வெளியாகி உள்ளது.