நைரோபி:

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 100 பேர் வரை இறந்துள்ளனர்.

இதன் காரணமாக வடக்கு கென்யா, மத்திய கென்யாவின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தலைநகர் நைரோபியிலிருந்து, மொம்பாஸா துறைமுகத்துக்குச் செல்லும் வழியெங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தண்ணீர் மூலம் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ராணுவம், போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.