மதுரை:
மதுரையில் இந்தியன் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளது.
மதுரையில் விளக்குத்தூண் பகுதியில் இந்தியன் வங்கியின் கிளை ஒன்று அமைந்துள்ளது. இங்கு பணிபுரிந்த ஊழியர் ஒருவரின் பணி ஓய்வை முன்னிட்டு பாராட்டு விழா நடந்தது. இதில் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஊழியர்கள் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அடையாளம் தெரியாத மர்ம நபர் காசாளர் அறையில் இருந்து ரூ.10 லட்சம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவலர்கள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.