
காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இரட்டை குண்டு வெடிப்பில் 21 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக வளாகத்தில் அமைந்துள்ள புலனாய்வுத் துறை கட்டிடத்தில் ஒரு குண்டு வெடிப்பு ஏற்பட்டது. தற்கொலைப்படையை சேர்ந்த ஒருவர் மனிதகுண்டாக மாறி வெடித்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் 5 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். இதை செய்தியாக்க செய்தியாளர்களும் புகைப்படக்காரர்களும் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இந்நிலையில் மற்றொரு குண்டு வெடிப்பு அதே இடத்தில் ஏற்பட்டது. இதனால் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த குண்டு வெடிப்பில் பிரான்ஸ் நாட்டு செய்தி புகைப்படக்காரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். ஆப்கன் நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த குண்டு வெடிப்பில் 21 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் 27 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
[youtube-feed feed=1]