சென்னை
சென்னை வேளச்சேரி – அரக்கோணம் மின்சார ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இன்று காலை வேளச்சேரி – சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் பாதையில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேளச்சேரி – கடற்கரை பாதியில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அத்துடன் ஏற்கனவே சென்னை செண்டிரலில் இருந்து திருத்தணிக்கு செல்லும் காலை 10 மணி மற்றும் 11.45 மணி மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் திருத்தணியில் இருந்து சென்னைக்கு இயக்கபடும் ரெயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இன்று மாலை 5.15 மணிக்கு இயக்கப்படும் வேளச்சேரி – அரக்கோணம் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.