வுர்ணமி தினம் மாதம் தோறும் வரும். தமிழக மக்கள் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற் குரிய நாளாக கருதுகின்றனர். தமிழ் மாதம் சித்திரையில் வரும் பவுர்ணமி  சித்திiu பவுர்ணமி எனப்படும்.  இதை சித்ரா பவுர்ணமி என்றும் அழைப்பதும் உண்டு,  அனைத்து பவுர்ணமிகளிலும் சித்திரா பவுர்ணமிக்கு தனிச்சிறப்பு உண்டு.

சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரை பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும்.

சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.

இன்றைய தினத்தில் தமிழ் மக்கள் வழிபடும் அனைத்துக் கோயில்களிலும் ‌சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். மேலும் சில கோயில்களில் சித்திரை திருவிழாக்கள் நடத்தப்பட்டு பவுர்ணமி தினம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.

‌ சி‌த்திரை பவு‌ர்ண‌மி அ‌ன்று சிவன் ,முருகன் போன்ற கோயில்களில் கிரிவலம் செல்வார்கள். சித்திரை நிலவில் கிரிவலம் செல்வது உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தரும்.

சி‌த்ரா பவு‌ர்ண‌மி அ‌ன்று காலை‌யி‌ல் கு‌ளி‌‌த்து முடி‌த்து பூஜையறை‌யி‌ல் ‌விநாயக‌ர் பட‌த்தை நடு‌வி‌ல் வை‌த்து, ‌சிவனை எ‌ண்‌ணி பூ‌ஜி‌க்க வே‌ண்டு‌ம். ச‌ர்‌க்கரை‌ப் பொ‌ங்க‌ல் செ‌ய்து படை‌த்து அதனை எ‌ல்லோரு‌க்கு‌ம் அ‌ளி‌க்கலா‌ம்.

‌பழ‌ங்கால‌த்‌தி‌ல், சி‌த்திரை  பவு‌ர்ண‌மி அ‌ன்று ஆ‌ற்ற‌ங்கரை‌யி‌ல் உற‌ல் தோ‌ண்டி அத‌ற்கு ‌திருவுற‌ல் எ‌ன்று பெய‌ர் சூ‌ட்டி, அ‌ங்கே இறைவனை வல‌ம் வர‌ச் செ‌ய்வா‌ர்க‌ள். சி‌த்‌திரை மாத‌த்‌தி‌ல் தாராளமாக‌க் ‌கிடை‌க்கு‌ம் மா, பலா, வாழை போ‌ன்ற பழ‌ங்களை இறைவனு‌க்கு படை‌த்து பூ‌ஜி‌ப்பா‌‌ர்க‌ள்.

இவ்வுலகின் பாவ புண்ணி பலனை அறிய சிவபெருமான் பார்வதி தேவியின் மூலம் தங்கப்பலகை கொண்டு வரச் செய்து அதில் சித்திரம் அமைத்தார். இதனை கண்டு அதிசயித்த பார்வதி இந்த சித்திரத்தை பேச வைக்க சிவனிடம் வேண்டினார். சிவனும் மந்திர உபதேசம் செய்து அந்த சித்திரத்திற்கு பேசும் சக்தியை கொடுத்து சித்ரபுத்திரன் என்ற பெயரும் வைத்தார்.

இந்த சித்திர புத்திரன் (சித்ரகுப்தன்) சித்திரை  பவுர்ணமி தினத்தில் அவதரித்தார். அண்ட சராசரங்களிலுள்ள முன்னாள் கணக்குகளையும், பிரம்மா விஷ்ணு முதலானவர்களுடைய பாவ புண்ணிய கணக்குகளையும் தினமும் தமக்குத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி சித்திர புத்திரனார் கயிலையிலிருந்து கொண்டு கணக்குகளை எழுதிவந்தார்.

‘சித்’ என்றால் ‘மனம்’ என்றும், ‘குப்த’ என்றால் ‘மறைவு’ என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.

மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துக்களால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.

ஒரு சமயம் தேவேந்திரன் தனக்கு மக்கட்பேறு வேண்டுமென்று தருமங்கள் பல புரிந்து இறைவனை நோக்கி இந்திராணியுடன் தவம் புரிந்தார். சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் இந்திராணி தவத்தை எடுத்துரைத்துப் பின்னர், சித்திரபுத்திரரை இந்திரனுக்குப் புத்திரனாகப் பிறந்து, அவன் கவலையை தீர்க்குமாறு அருள்புரிந்தருளினார். அங்ஙனமே சித்திரபுத்திரனார் காமதேனுவின் வயிற்றில் உதித்து பாவ புண்ணியங்களைப் பகுத்து வந்தார். இந்த சித்திரபுத்திர நாயனார் கதை சித்திரை பவுர்ணமி அன்று ஆலயங்களில் படிக்கப்பட்டு அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன. சித்திரைக் கதை, சித்திரைக் கஞ்சி எனவும் வழங்கப்படும்.

இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பவுர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் முன் – பின்னாக வருவதால் அந்த மாதத்திற்கு சித்திரை மாதம் என்று பெயர்.

சித்திர குப்தனை வேண்டிக்கொண்டு பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்திரா பவுர்ணமி தினத்தில் சித்திர குப்தனைப்போல மாக் கோலம் போட்டு, ஏடு, எழுத்தாணி வைத்து விளக்கேற்றி பூஜை செய்து பொங்கலிட்டு வழிபடுவர். பாவங்களிலிருந்து விடுபடவும், நரகத்திற்கு போகாமலிருக்கவும் இந்த விரதம் மேற்கொள்கின்றனர்.

இந்த நாளில் மரணதேவனின் விசேஷ பிரதிநிதியான சித்ரகுப்தனுக்கு விசேஷ வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தில் செய்யப்படும் இந்த பூஜையால் மேல் உலகில் உள்ள தேவர்கள் திருப்தியடைந்து மனிதர்களின் செயல்களை மிகுந்த பரிவுடன் தீர்மானிக்கிறார்கள்.

சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த ‘சித்ரா அன்னம்’ எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும் அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.

திருவண்ணாமலையில் கிரிவலம்

இன்றைய தினம்  திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். . இங்கு மலையே சிவனாக வணங்கப்படுவதால்  பவுர்ணமி நாட்களில் மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தூர கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலை யம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.சித்திரை பவுர்ணமிக்கு கிரிவலம் செல்வது மிகவும் சிறந்தது என்று சித்தர்கள் கூறுகிறார்கள். சித்திரை கவுர்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் ஓராண்டு முழுவதும் கிரிவலம் வந்ததற்கான பலன் கிடைப்பதாக புராணங்கள் கூறுகிறது.

எனவே, திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமி தினத்தன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.

இன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வேண்டிய உகந்த நேரமாக  இன்று காலை 7.00 மணி முதல் நாளை காலை 6.54 மணி வரை கணிக்கப்பட்டுள்ளது.

நாமும் இன்றைய தினத்தில் இறைவனை வழிபட்டு சித்திகள் பெறுவோம்… ஓம் நமச்சிவாய….