சென்னை:

ச்சநீதி மன்றத்தின் மேல்முறையீடு மனு மீதான  உத்தரைவை தொடர்ந்து நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில்  நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று பிற்பகல் 3 மணிக்கு  சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

‘நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் மதுபானக்கடைகளான டாஸ்மாக்கை நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்ற வேண்டும் என்று முதலில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. பின்னர் மாநில அரசுகளின் மேல்முறையீடு காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து  டாஸ்மாக் கடைகளை திறக்க உத்தரவிட்டது.

தேசிய, மாநில நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் இருந்த 2,500 கி.மீ நீள சாலைகள் உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு ஊரக சாலைகளாக மாற்றப்பட்டன. பின்னர், அந்த இடங்களில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் பல இடங்களில் நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணை ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.