
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தாசில்தார் பணிக்கான தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட் வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஹால்டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
நாளை நடைபெற்ற மாநில அளவிலான தாசில்தார் பணிக்கு ஹால்டிக்கெட்இணையதளங்கள் மூலம் , காஷ்மீர் மாநில அரசுப்பணிகள் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது.
இதில் கழுதை ஒன்றுக்கும் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில், கழுதையின் பெயர் ‘பழுப்பு கழுதை’ என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஹால்டிக்கெட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடத்த தேர்வு வாரியய்ம உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்வு ஒன்றுக்கு பசு மாட்டுக்கு ஹால் டிக்கெட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]