டில்லி:

இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் சராசரி விலை 19 சதவீதம் வரை கடந்த ஆண்டு உயர்ந்துள்ளது. 2வது ஆண்டாக தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் உயர்ந்த விலை கொண்ட ஸ்மார்ட் போன்களை அதிகம் வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்திய சந்தை என்பது கடுமையான விலை உணர்வு திறனை கொண்டது என்ற போதிலும் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. உயர் விலை கொண்ட ஸ்மார்ட் போன்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக செலவு செய்துள்ளனர்.

இது நடுத்தர பிரிவு மட்டுமில்லாமல் உயர் பிரிவுகளில் இந்த நிலை உள்ளது. ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் அறிமுகம் செய்த உயர் வசதிகள் கொண்ட ஸ்மார்ட் போன்களும் அடக்கம்.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் எக்ஸ் என்ற ரூ. 1 லட்சம் விலையிலான உயர் ஸ்டோரேஜ் வசதி கொண்ட ஸ்மார்ட போனையும் அறிமுகம் செய்தது. இதற்கு முன்பு இந்திய சந்தையில் இத்தகைய ஒரு ஸ்மார் ட் போனை பார்த்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச புள்ளிவிபரங்களின் படி சாராசரி விலை உயர்வு என்பது 16 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை உள்ளது. அதாவது 144 டாலர் முதல் 157 டாலர் வரை 2017ம் ஆண்டில் உயர்ந்துள்ளது. 2016ம் ஆண்டில் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதாவது 122 டாலர் முதல் 135 டாலர் வரை உயர்ந்துள்ளது.

[youtube-feed feed=1]