
இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணறு தீப்பிடித்து எரிந்ததில் 10 பேர் பலியானார்கள்.
இந்தோனேஷியாவின் மேற்கு பகுதியில் அசே மாகாணம் அமைந்துள்ளது. இங்கு எண்ணெய் கிணறு ஒன்று உள்ளது. இதில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் அந்நாட்டின் பேரிடர் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குழாய்களை வெல்டிங் செய்யும்பொழுது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
எண்ணெய் கிணறில் சட்டவிரோத முறையில் துளையிட்டதனால் 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என்றும் அன்டாரா அரசு கழகம் இதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
Patrikai.com official YouTube Channel