சண்டிகர்:
மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் செயல்படும் மதுபான கடைகள், பார்களை மூட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி உத்தரவிட்டது. ஏப்ரல் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தது. சுமார் 70 சதவீத சாலைகளில் மது விற்பனைக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், அதன் பின்னர் மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து எல்லைகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வரும் நெடுஞ்சாலைகளுக்கு இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக முன்பு இருந்ததை விட தற்போது கூடுதல் மதுபான கடைகள் புற்றீசல் போல் முளைத்துள்ளது. நெ டுஞ்சாலைகள் உள்ளாட்சி சாலைகளாக தரம் மாற்றப்பட்டு மதுபான கடைகள் அதிகளவில் திறக்கப்பட் டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீற சில மாநில அரசாங்கங்களே நடவடிக்கை எடுத்துள்ளது. சண்டிகரை சேர்ந்த ச £லை பாதுகாப்பு நல ஆர்வலரான ஹர்மந்தன் சிந்து என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் அடிப்படையிலேயே இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்று தடை விதிக்கும் நிலை உருவானது.
தற்போதைய நிலை குறித்து அவர் கூறுகையில், ‘‘சண்டிகரில் சில பெரிய ஓட்டல்கள் மற்றும் பப்புகள் நெ டுஞ்சாலைகளில் அமைந்துள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்நது இவை ஒரு சில மாதங்கள் அடை க்கப்ப்டடன. நகரின் இதய பகுதியில் இருந்த 5 நட்சத்திர ஓட்டல் கூட அடைக்கப்பட்டது.
ஆனால், தற்போது இதன் நிலை தலைகீழாக மாறிவிட்டது. பெட்ரோல் பங்குகளில் கூட பீர் மற்றும் ஒயின் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது ஊக்குவிக்கப்படுகிறது. நெடுஞ் சாலைகளில் அனுமதியின்றி மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஹரியானா சண்டிகர் உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதையடுத்து அனுமதியில்லாமல் மதுபான கடைகளை திற க்கவிடக் கூடாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது’’ என்றார்.
குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதற்காகவே ஹர்மந்தன் சிந்து இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். இதற்கு காரணம் அவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கி ஊனமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.