டில்லி:

ர்நாடக சட்டமன்ற தேர்தலையொட்டி, 4வது கட்டமாக 7 பேர் வேட்பாளர் பட்டியலை பாரதியஜனதா தலைமை வெளியிட்டு உள்ளது.

வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாக உள்ள நிலையில் இன்னும் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. இது கர்நாடக பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

224 சட்டமன்ற தொகுதிகள் உள்ள கர்நாடக சட்டசபைக்கு  இதுவரை 4 கட்டங்களாக  220  வேட்பாளர்களின் பெயர்களை மட்டுமே பாஜக அறிவித்து உள்ளது.

கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு  அடுத்த மாதம் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை பிடிக்க பாஜகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், 224 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்து வருகிறது.

ஏற்கனவே  காங்கிரஸ் கட்சி எல்லா தொகுதிகளுக்குமான வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், பாஜக கொஞ்சம் கொஞ்சமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

முதல்கட்டமாக கடந்த 9ந்தேதி 72 பேர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக 82 பேர் கொண்ட பட்டியலும்,   3வது கட்டமாக 59 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலும் வெளியிட்டது.

இந்நிலையில் தற்போது 4வது கட்டமாக 7 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதுவரை 220 வேட்பாளர்கள் மட்டுமே அறிவித்து உள்ளது.  இன்னும் 4 இடங்களுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

நாளைதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில், இன்னும் 4 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாதது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது