கொல்கத்தா:
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 8.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 96 ரன் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 13 ஓவரில் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
இதையடுத்து விளையாடிய கெய்ல், லோகேஷ் ராகுல் ஆகியோர் அரை சதம் கடந்தனர். தொடர்ந்து கெய்ல் 62 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். கடந்த 2 போட்டியில் சென்னை, ஐதரபாத் அணிகளை வீழ்த்திய பஞ்சாப் அணி தொடர்ந்து 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
[youtube-feed feed=1]