டில்லி:

லைநகர் டில்லி அருகே உள்ள நொய்டாவில், ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை உ..பி.மாநில போலீசார் கைது செய்தனர். அவர்களிடம்  21 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டமும் நடைபெற்று முக்கிய நகரங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னையிலும் சமீபத்தில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்ட நிலையில், உ.பி. மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் ஐபிஎல் போட்டி குறித்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல் அறிந்த போலீசார், சிறப்பு அதிரடிப் படையினருடன் சென்று, சூதாட்டம் நடைபெற்று வருவதாக அறிந்த ஜே.பி. கிரீன்ஸ் என்ற அடுக்குமாடி வீட்டை முற்றுகையிட்டனர்.

அப்போது அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 11வது மாடியில் சூதாட்டம் நடைபெற்று வருவது தெரிந்தது. அதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 40 செல்போன்கள், 3 லேப்டாப், 2 எல்.இ.இ. டிவி மற்றும் ஒரு பிரின்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.