டில்லி:
நாட்டின் பல மாநிலங்களில் பண பற்றாகுறை நிலவுகிறது. இதனால் ஏ.டி.எம்.கள் செயலிழந்து காணப்படுகிறது. பணம் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘பணம் விநியோகத்தை தன்னிச்சையாக குறைத்தது தான் பண பற்றாகுறைக்கு காரணம். பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப பண விநியோகத்தையும் அதிகரிக்க வேண்டும். மக்களுக்கு தேவையான நேரத்தில் போதுமான பணம் வழங்க வேண்டியது அரசின் கடமை. பணம் சப்ளை செய்வதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தக் கூடாது. பண பற்றாகுறை இருந்தால் அதற்கான காரணத்தை ரிசர்வ் வங்கி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]