குல்தீப் சிங்

ன்னாவ்

த்திரப் பிரதேசத்தில் பாஜக வின் குல்தீப் சிங்கை அவரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் முன்பு அவரை அண்ணா என அழைப்பேன் என தெரிவித்துள்ளார்.

உத்திரப் பிரதேசம் உன்னாவ் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.   அத்துடன் அந்தப் பெண்ணின் தந்தை குல்தீப் சிங்கின் சகோதரர் தாக்கிய பின் மரணம் அடைந்துள்ளார்.   இந்த விவகாரம் நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது.

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒரு நாளிதழுக்க்கு அளித்த பேட்டியில் குல்தீப் சிங்குக்கும் தனது குடும்பத்துக்கும் சுமுகமான உறவு இருந்ததாகவும் அவரை தாம் அண்ணா என அழைத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.   தனக்கு வேலை அளிப்பதாக கூறி பலாத்காரம் செய்ததாகவும் அவர் அந்த பேட்டியில் கூறி உள்ளார்.

பேட்டியின் முழு விவரம் வருமாறு :

”குல்தீப் சிங் எனது வீட்டுக்கு எதிர் விட்டில் வசித்து வந்தார்.  அவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கட் வருவார்.  எனது பெரியப்பாவுக்கு அவர் நெருங்கிய நண்பர்.   நாங்கள் அவரை ‘அண்ணா’ என அழைப்போம்.   சில வேளைகளில் அவர் எனது பாட்டியிடம் முட்டைப் பொறியல் செய்யச் சொல்லி விரும்பிச் சாப்பிடுவார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் நான்காம் தேதி அவர் எனக்கு வேலை வாங்கித் தருவதாக வீட்டுக்கு அழைத்தார்.  உள்ளே சென்ற என்னை பலாத்காரம் செய்தார்.   நான் அதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார்.  ஒரு வாரம் கழித்து ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி அன்று என்னை அவருடைய ஆட்கள் சிலர் கடத்திச் சென்று கூட்டாக பலாத்காரம் செய்தனர்.   அதன் பிறகு என்னை வேறொருவரிடம் விற்று விட்டனர்.  அங்கிருந்து நான் மீட்கப்பட்டேன்.

அதன் பிறகு டில்லியில் உள்ள எனது மாமாவின் வீட்டுக்கு சென்றேன.    அங்கு எனது மாமியிடம் நடந்ததைக் கூறினேன்.  அவர் எனது மாமாவிடம் அதை தெரிவித்தார்.    மாமா என்னை லக்னோவுக்கு அழைத்துச் சென்றார்.  நான் அங்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம் ஒரு அனுஅளித்து எனக்கு நேர்ந்ததை மனுவில் தெரிவித்தேன்.  அவர் அந்த மனுவை அதிகாரிகளிடம் அளித்தார்.   ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை.   அதன் பிறகு நானே ஜனாதிபதி, பிரதமர் .  உ.பி  காவல் அதிகாரி உள்ளிட்ட பலருக்கும் உதவி கோரி மனு செய்தேன்.  ஆனால் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடைசி நடவடிக்கையாக முதல்வர் இல்லத்துக்குச் சென்று அவரை பார்க்க விரும்பினேன்.  ஆனால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.   என்னால் எனது குடும்பம் முழுவதும் துயருறுவதை நான் விரும்பவில்லை.   அதனால் நான் எடுத்துச் சென்ற மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றேன்.   என்னை தடுத்து விட்டனர்.  சாக நினைத்த எனக்கு பதில் என் தந்தை இறந்து விட்டார்.   அண்ணன் என நினைத்தவர் செய்த அநியாயத்தால் எனது தந்தையை இழந்தேன்” என அந்தப் பேட்டியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]