சென்னை:

காவிரி பிரச்சினை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்றும், பேராட்டத்தை திசை திருப்பரவ ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது என்று பாரதிராஜா ஆவேசமாக கூறினார்.

தமிழர்களுக்காக,  தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை இன்று  தொடங்கினார் இயக்குனர் பாரதிராஜா. இதுகுறித்த அறிவிப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  இயக்குநர் பாரதிராஜா உடன், இயக்குநர்கள் செல்வமணி, நடிகர் சத்யராஜ் தங்கர்பச்சான், இயக்குனர் அமீர்  உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அதையடுத்து  செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, தமிழனாக குரல் கொடுக்க தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்டுள்ளது என்றும், பேரவையில் இருப்பவர்கள் அரசியல் சாராமல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

எங்கள் பேரவைக்கு வருபவர்கள் இனமானம் காப்பதற்கும், மொழியைக் காப்பதற்கும், எந்த சாயலும் இல்லாமல், தெளிந்த வெள்ளை மனமுடையவர்கள் இந்த பேரவைக்கு வர வேண்டும் என்றும்,அரசியல் சாயத்தை கலைத்து விட்டு ஒரு தமிழனாக கூடுவதற்காகவே இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

அரசியல் சாயம் எதுவுமின்றி போராடவும், கலை இலக்கிய பண்பாட்டினை காக்கவே இது தொடங்கப்பட்டுள்ளது என்ற அவர், இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பல சோதனைகள் வந்துள்ளன என்று கூறினார்.

மேலும், காவிரி விவகாரததில் தமிழகமே கொந்தளிக்கும்போது, தமிழக போராட்டத்தை திசை திருப்புவதற் காகவே ஐபிஎல் போராட்டத்தை வலிந்து நடத்துகிறதோ என்ற ஐயப்பாடு எழுவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்தார்.

ஐபிஎல் போட்டியை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. போட்டியை தள்ளி வையுங்கள் என்றுதான் கூறுகிறோம். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஐபிஎல் போட்டியை தள்ளி வையுங்கள் என்றார்.

தங்கள் அமைப்பின் கொள்கை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த பாரதிராஜா,  போருக்கு போகிறவன் அதன் வழிமுறைகளைச் சொல்லமாட்டான். ஆனால் போர் வரும் என்று கூறினார்.

அதிமுக அரசு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர்,  அதிமுக அரசு உரிமைகளை வேறு எங்கேயோ வைத்திருப்ப தாக ஐயம் எழுவதாகவும், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்க. நாங்கள் எங்கள் கடமையை வெளிப்படுத்துகிறோம் என்றும் பாரதி ராஜா கூறினார்.