டில்லி

பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் யஷ்வந்த் சிக் கட்சியை விமர்சித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உ. பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் புகாரைக் கேட்காமல் விரட்டி அடித்ததாக உ.பி.  மாநிலத்தை சேர்ந்த சோட்டேலால் கர்வார் என்னும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.   அந்த பரபரப்பு முடிவதற்குள் மற்றொரு தலித் பாராளுமன்ற உறுப்பினர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.   இவரும் உ. பி.  மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

உத்திரப் பிரதேச மாநிலம் நகினா தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் யஷ்வந்த் சிங்.  இவர் தலித் வகுப்பை சேர்ந்தவர்.   இவர் கட்சியின் தலைமையை விமர்சித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  தனது கடிதத்தில், “நான் எனது தொகுதியில் பாஜக கட்சிக்காரன் என்பதால் வெற்றி பெறவில்லை.    இட ஒதுக்கீட்டினால்தான் நான் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளேன்.

கடந்த 4 ஆண்டுகளாக இந்த நாட்டில் உள்ள 30 கோடிக்கும் மேற்பட்ட தலித் மக்களுக்கு மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை.     அத்தோடு நில்லாமல் சமீபத்தில் மேலும் ஒரு அநீதி இழைத்துள்ளது.  உச்சநீதிமன்றத்தின் வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் பற்றி மத்திய அரசு நடவடிக்கை எதுவும் இதுவரை எடுக்கவில்லை.   மத்திய அரசானது  தலித் மக்களின் உரிமையை பாதுகாக்க எந்த நடவடிகையும் எடுக்கவில்ல.  இந்த திருத்தத்தை உடனடியாக உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என யஷ்வந்த் சிங் குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]