
மும்பை
ஐபிஎல் முதல் நாள் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்ட டுவெய்ன் பிராவோவின் நேற்றைய சாதனை விவரங்கள் இதோ
நேற்று நடந்த ஐபிஎல் முதல் நாள் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி இருபது ஓவர்களில் 4 விக்கட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தன. இரண்டாவதாக களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 12 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சோர்வடைந்தனர்.
அப்போது களம் இறங்கிய பிராவோ தனது அபார ஆட்டத்தால் 30 பந்துகளில் 68 ரன்களை எடுத்து சென்னை அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தி அணியை வெற்றிக்கு அருகில் எடுத்துச் சென்றார். நேற்றைய போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர் என்பதுடன் பந்து வீச்சிலும் தனது திறமையை பிராவோ காட்டினார். அவர் நான்கு ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்திருந்தார்.
மேலும் பேட்டிங்கின் போது 3 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அடித்தது குறிப்பிடத் தக்கது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பின் மீண்டும் விளையாடத் தொடங்கி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு புத்துணர்வைக் கொடுத்தவர் பிராவோ என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நேற்றைய போட்டியில் பிராவோ ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டதை அறிவித்த உடன் ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
[youtube-feed feed=1]