பெங்களூரு

ர்நாடக சலுவாலி அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ் தமிழக எல்லையை முற்றுகை இட வந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை எதிர்த்து தமிழகம் எங்கும் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது.   எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று முழு கடையடைப்பு நடந்துக் கொண்டு இருக்கிறது.    பல தொடர் போராட்டங்களும் நடந்து வருகின்றன

கர்நாடக சலுவாலி அமைப்பு என்னும் கன்னட அமைப்பின் தலைவர் வட்டாள் நாகராஜ்.   இவர் காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலத்துக்கு ஆதரவு அளித்து வருபவர்.    மேலும் மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வருகிறார்.

இன்று அவர் ஆதரவாளர்களுடன் தமிழக எல்லையை முற்றுகை இட வந்தார்.   அதனால் அவரைக் கைது செய்த காவல்துறையினர் திருப்பி அனுப்பியது.   அவர், “கர்நாடகாவில் முழு அடைப்பு நடத்த நாங்கள் எண்ணவில்லை.    அத்துடன் தமிழக போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்க வரும் 12ஆம் தேதி முழு அடைப்பு நிகழ்த்த உள்ளோம்

தமிழகத்தில் போராட்டம் நடப்பதால் நாங்கள் அதற்கு எங்கள் எதிர்ப்பை காட்ட முற்றுகை போராட்டத்தில் ஈடு பட்டோம்.    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி செய்தால் மத்திய அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் எங்க மாநிலத்தில் நுழைய அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.